கோலாகலமாக நடைபெற்ற நடிகை வரலக்ஷ்மி திருமணம் : திருமணம் முடிந்தவுடன் சரத்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
நடிகை வரலட்சுமி மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில் ஜூலை 2ஆம் தேதி நிக்கோலாய் சச்தேவ் - வரலட்சுமி திருமணம் தாய்லாந்தில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திருமணத்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளுக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பல திரையுலக பிரபலங்களுக்கும் நேரில் சென்று சரத்குமார் அழைப்பிதழ் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தாய்லாந்தில் சிறப்பாக வரலட்சுமி திருமணம் நடந்த நிலையில் நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சரத்குமார் அறிவிப்பு ஒன்றில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
’எனது மகள் செல்வி வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு இன்று அதாவது ஜூலை 3ஆம் தேதி புதன்கிழமை அன்று மாலை நடைபெறுவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கால அவகாசம் குறைவாக இருந்ததால் உங்கள் அனைவரையும் நேரில் சந்தித்தும், அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைக்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் திருமணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு குடும்பத்தோடு திருமண தம்பதிகளும் உங்கள் அனைவரையும் சந்திக்க இருப்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை ஜூலை 4ஆம் தேதி உங்களுக்கு வந்தடைய செய்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சரத்குமார் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.