இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய ’ஐஸ்வர்யா’ இவர் தானா..??

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து தொடர்ந்து பல நடிகர்கள் வெளியேறி வருகின்றனர். விரைவில் கதிராக நடித்து வரும் குமரன், அந்த சீரியலில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சாய் காயத்ரி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளார். 
 
சாய் காயத்ரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில், ஏற்கனவே அதே சீரியலில் நடித்தவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் - தம்பிகள் கூட்டுக்குடும்பமாக, ஒன்றாக வாழ முனைவது தான் இந்த சீரியலின் மையக்கதை. அவ்வப்போது சுவாரஸ்யமாக இருந்தாலும், பல நேரம் இந்த சீரியல் சலிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் பலர் கூறுகின்றனர்.

தற்போது இந்த நாடகத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்களான தனம், முல்லை மற்றும் ஐஸ்வர்யா 3 பேரும் கர்ப்பமாக உள்ளனர். இதை வைத்தே கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஓட்டிவிட்டனர். வழக்கம் போல மீனாவின் பஞ்சாயத்து, அவருடைய அப்பாவின் சூழ்ச்சி என பழைய கதை ஒரு பக்கம் ஓடுகிறது.

இந்நிலையில், இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து வெளியேறி விட்டாராம். இதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் உறுதி செய்துள்ளனார். பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் போக்கு சரியில்லை. அது எனது தொழில்முறை வாழ்க்கைக்கு சரிவராது. அதனால் தொடரில் இருந்து விலகுகிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

வி.ஜே. தீபிகா

முன்னதாக பாண்டிய ஸ்டோர்ஸில் நடித்து வந்த சித்ராவின் மறைவை தொடர்ந்து, அவர் நடித்து வந்த முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் ஒப்பந்தமானார். அவரும் அண்மையில் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது லாவண்யா என்பவர் முல்லையாக நடித்து வருகிறார். அதேபோன்று முதலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்தவர், வைஷாலி தனிகா என்பவர் நடித்து வந்தார்.

அவர் தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து விஜே-வான தீபிகா ஐஸ்வர்யவாக நடித்தார். கடந்த 2022-ம் ஆண்டு அவரும் வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு சாய் காயத்ரி, ஐஸ்வர்யாவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குள் வந்தார். தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யாவாக விஜே தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கால்பதிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web