124 கோடிக்கு அதிபதியான நடிகை..!

தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் குட்டி ராதிகா. பெங்களூருவை சேர்ந்த இவர் அதிகமான கன்னட படங்களிலும் நடித்துள்ளார். குட்டி ராதிகாவை கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
ராதிகாவின் திருமணம் குறித்து திரையுலகம் முதல் அரசியல் வட்டாரம் வரை பல்வேறு விவாதங்கள் நடந்தது. திருமணத்துக்குப் பின் ராதிகாவின் நடிப்பு வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எனினும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியால் நிரம்பியது.
ஆனால், குமாரசாமியின் அரசியலை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். ஏனென்றால், திருமணத்தின் போது குமாரசாமியை விட ராதிகா சுமார் 27 வயது இளையவர். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். குமாரசாமியின் முதல் திருமணம் 1986-இல் அனிதா என்பவருடன் நடந்தது. ராதிகாவின் முதல் திருமணம் 2000-ஆம் ஆண்டு நடந்தது. என்றாலும் அந்தத் திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. தொழிலதிபரான அவரது முதல் கணவர் 2002-ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ராதிகாவின் முடிவை அவரின் தந்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால், தந்தையின் முடிவை மீறி, குமாரசாமியைக் காதலித்து ரகசிய திருமணம் செய்தார் ராதிகா. ராதிகாவின் இந்த நடவடிக்கை அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இப்படியாக சுமார் 30 படங்களில் நடித்துள்ள ராதிகா, குமாரசாமியுடனான திருமணத்துக்குப் பிறகு, நடிப்பு வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டார். அதேநேரம், திரைப்படத் தயாரிப்பாளர் என்கிற வேறு பரிணாமத்தை எடுத்தார். குமாரசாமியுடனான திருமணத்துக்குப் பிறகு கோடீஸ்வரி ராதிகா, ரூ.124 கோடி சொத்துக்கு எஜமானியாகத் திகழ்ந்து வருகிறார்.