நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி விரைவில் கைது..?

 
சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திரிவேதி

பிரபல நடிகைகள் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சினிமா துறையில் கடந்தாண்டு பல நடிகர், நடிகையர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தது. 

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த தொடங்கினர். அதன்படி போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர்.

இந்த நடவடிக்கை மேலும் புயலை கிளப்பியது. தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும்,  நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தினார்களாக என உறுதி செய்யும் ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான ஆய்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை உடனடியாக தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web