ஆம் விபத்து நடந்தது உண்மை தான்- தி கேரளா ஸ்டோரி நடிகை வாக்குமூலம்..!!

அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் விபத்தில் சிக்கியது தொடர்பாக வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
kerala story

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான அடா ஷர்மா, இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இவருடைய நடித்து அண்மையில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படத்துக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. 

சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அடா ஷர்மா, சித்தி இதானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இவர்களில் அடா ஷர்மா, தமிழகத்தைச் சேர்ந்தவர். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையிலாகும். 

இவர் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயங்கள் அடைந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து சமூகவலைதளங்களில் அவருக்கு நிறைய பேர் உடல் தேறி வரவேண்டும் என்று வாழ்த்து பதிவிட்டு இருந்தனர்.

அதற்கு பதிலளித்துள்ள அடா ஷர்மா, அமாம், தனக்கு விபத்து நடந்தது உண்மை தான். இந்த தகவல் குறித்து தெரியவந்ததும், படக்குழுவில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். எங்களுக்கு எந்த பிரச்னையுமில்லை. நடந்து ஒரு பெரிய விபத்து எல்லாம் கிடையாது. என்மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார். 
 

From Around the web