மக்களுக்காக ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகளை அமைக்க இருக்கும் அதானி..!

அதில் , கெளதம் பாரம்பரிய சடங்குகளை பின்பற்றி திருமணத்தை செய்ததுடன் தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கெளதம் திருமணத்தை செலவு குறைவாக செய்தது கஞ்சத்தனத்துக்காக இல்லை. அந்த திருமணத்திற்கு செலவு செய்கின்ற பணத்தை சமூகத்திற்கு செலவு செய்யவதற்காகவே ஆடம்பரமாக செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.
மேலும் , திருமணத்திற்கு செலவிடும் 10000 கோடி பணத்தையும் மக்களின் நல்வாழ்விற்கும் சமூகசேவை செய்யவும் கொடுக்கப் போவதாக கூறியதுடன் மகனின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்குவதால் 500 மாற்று திறனாளிகளிற்கு திருமணம் செய்வதற்கு 10 லட்சம் காசை பரிசாக கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் , கெளதம் இந்த உதவியை ஆண்டு தோறும் செய்வதற்கும் முடிவெடுத்துள்ளார். இதைவிட , மக்களுக்காக ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகளை அமைக்கப்போவதாக கூறியதுடன் " மக்கள் சேவையே மகேசன் சேவை " எனவும் தெரிவித்துள்ளார்.