அதர்வா, ராஜ்கிரண், ராதிகா இணையும் புதிய படம்..! முழு விபரம் உள்ளே..!

 
அதர்வா புதிய படத்தின் பூஜை

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சற்குணம் அடுத்ததாக இயக்கும் படத்தில் அதர்வா, ராஜ்கிரண், ராதிகா, சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

களவாணி படம் மூலம் இயக்குநராக அறிமுகானவர் சற்குணம். அதை தொடர்ந்து வாகை சூடவா, சண்டி வீரன், களவாணி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கான பூஜை நடந்து முடிந்தது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இருவரும் சண்டிவீரன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். ராதிகா மற்றும் ராஜ்கிரண் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. படக்குழு அனைவரும் பங்கேற்றனர். மிகவும் அழுத்தமான கதைகளத்துடன் இதனுடைய திரைக்கதை தயாரிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
 

From Around the web