எமோஷனலாக பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் : எந்த ஹீரோவும் என்ன...

அஜித் மற்றும் ஆதிக் கூட்டணி இணையும் என ஒரு சில வருடங்களுக்கு முன்பு கூறியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் அஜித் ஆதிக்குடன் கூட்டணி அமைத்தார். வாலி திரைப்படத்தின் மூலம் எஸ்.ஜெ சூர்யா என்பவரை இயக்குனராக்கியது முதல் குட் பேட் அக்லி படத்தில் ஆதிக்கிற்கு வாய்ப்பு கொடுத்தது வரை அஜித் இதுபோன்ற பல தில்லானா முடிவுகளை எடுத்திருக்கிறார்.
அந்த முடிவுகள் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. வாலி படம் பண்ணும்போது பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்ததாம். எஸ்.ஜெ சூர்யா என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அஜித் மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கின்றார் என பலர் கூறினார்களாம். ஆனால் அந்த முடிவு தான் அஜித்தின் திரைவாழ்க்கையையே மாற்றியது.
அந்த முடிவுகள் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. வாலி படம் பண்ணும்போது பலதரப்பட்ட விமர்சனங்கள் வந்ததாம். எஸ்.ஜெ சூர்யா என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் அஜித் மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கின்றார் என பலர் கூறினார்களாம். ஆனால் அந்த முடிவு தான் அஜித்தின் திரைவாழ்க்கையையே மாற்றியது.
அந்த முடிவும் அஜித்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. அஜித்தின் ஐம்பதாவது படமான மங்காத்தா கல்ட் க்ளாஸிக் படமாக உருவெடுத்தது.இந்நிலையில் தற்போது குட் பேட் அக்லி படத்தின் மூலம் ஆதிக்குடன் கைகோர்த்துள்ளார் அஜித். பலரும் ஆதிக் இயக்கத்தில் அஜித்தா ? இது ஒர்கவுட் ஆகுமா ? என சிலர் சந்தேகித்தனர். அந்த சந்தேகங்களுக்கு எல்லாம் தரமான பதில் கொடுத்திருக்கின்றார் ஆதிக்.
குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. குறிப்பாக அஜித் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அஜித் தன்னை இயக்குனராக செலக்ட் செய்ததை பற்றி பேசியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஆதிக். அப்படம் சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதன் பிறகு சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கினார் ஆதிக். இப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. மேலும் பல பிரச்சனைகளையும் இப்படம் சந்தித்தது. இப்படத்திற்கு பிறகு ஆதிக்கிற்கு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையாம். எந்த ஒரு ஹீரோவும் தன்னிடம் கதை கேட்க கூட ரெடியாக இல்லையாம். அந்த சமயத்தில் அஜித்தின் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்தது.
அப்படத்தின் படப்பிடிப்பின்போது தான் அஜித்துடன் பழகும் வாய்ப்பு ஆதிக்கிற்கு கிடைத்தது. அப்போது அஜித் ஆதிக்கின் இயக்கத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்தாராம், எந்த ஒரு ஹீரோவும் தன்னிடம் கதை கேட்கக்கூட ரெடியாக இல்லாத நிலையில் அஜித் சார் என்னை நம்பி எனக்கு படம் கொடுத்தார் என எமோஷனலாக பேசினார் ஆதிக்