இறுதிக்கட்டத்துக்கு வந்த ஆதிபுருஷ்- அசந்துபோன பிரபாஸ்..!

பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது படக்குழுவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமாயணக் கதையை மையமாக உருவாக்கப்பட்டு வரும் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் படம் தான் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிக்க, சையிஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.
இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்தாண்டு தான் துவங்கியது. ஆனால் இப்போது ஆதிபுருஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு ஒரு மாதம் நடைபெறவுள்ளதாகவும், அத்துடன் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்தின் வேலைகள் சீக்கரமே முடிவது பிரபாஸுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதனுடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிச்சயம் காலதாமதமாகும் என்பதே உண்மை.
தெலுங்கு இந்தியில் நேரடியாக உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளிவரவுள்ளது. ஆதிபுருஷ் படம் வரும் 2022 ஆகஸ்டு 11-ம் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.