சின்னத்திரைக்கு வந்த அதிதி பாலன்..!

 
அதிதி பாலன்

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அதிதி பாலன், சின்னத்திரையில் பிரபலமான நாட்டிய நிகழ்ச்சியை தொகுத்து வருவது தெரியவந்துள்ளது.

அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான ‘அருவி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அதை தொடர்ந்து தமிழில் சில ஓ.டி.டி படங்கள், ஆந்தாலஜி படங்களில் அவர் நடித்தார்.

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அதிதி. மேலும் மலையாளப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயா டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘தக திமி தக ஜனு’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அதிதி. கடந்த சில வாரங்களாக அவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சிகள் சமூகவலைதளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போது எதற்காக அதிதி சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

From Around the web