நெருப்பு வளையத்திற்குள் அதிதி பாலன்- பதறவைக்கும் வீடியோ..!

 
அதிதி பாலன்

அருவி அதிதி பாலன் நெருப்பு வளையத்தை லாவமாக சுற்றி விளையாடும் சாகச வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதறவைக்கிறது.

அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான ‘அருவி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். அதை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாகவே பல்வேறு கலை சார்ந்த நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் சமூகவலைதளத்தில் தீ வளையத்துடன் சாகசம் செய்யும் இரண்டு வீடியோக்களை அவர் பதிவிட்டுள்ளார். இது எப்போது எடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் சில நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்க்கும் பலரும் அதிதி பாலனின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர். அதே சமயத்தில் சினிமாவில் அமைதியான பெண் வேடத்தில் நடித்துக் கொண்டு, நிஜ வாழ்க்கையில் அதிதி பாலன் சாகச பெண்மணியாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

From Around the web