சித்தார்த் உடன் காதலா? அதிதி ராவ் என்ன சொன்னார் தெரியுமா..??

சித்தார்த் உடனான காதல் தொடர்பாக மறைமுகமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை அதிதி ராவ் வெளியிட்ட சமிக்ஞை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
aditi rao

ஹைதராபாத்தைச் சேர்ந்த அதிதி ராவ், கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘சிருங்காரம்’ படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். ஆனால் அதையடுத்து அவர் தொடர்ந்து இந்தி சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். குணச்சித்திர கதாபாத்திரங்கள் முதல் கதாநாயகி வரை பல்வேறு கேரக்டரில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், அதிதி தனது 21 வயதில் சத்யதீப் மிஷ்ரா என்கிற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.   ஆனால் அவரிடம் இருந்து  2013-ம் ஆண்டு விவகாரத்து பெற்றார். இந்தியில் பெரியளவில் வாய்ப்புகள் அமையாத நிலையில், மீண்டும் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு திரும்பினார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படம் படுதோல்வி அடைந்தாலும், அதிதிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதன்மூலம் தமிழில் பிஸியான நடிகையாக அவர் மாறினார். தொடர்ந்து மணிரத்னத்துடன் ‘செக்க சிவந்த வானம்’, மிஷ்கினுடன் ‘சைக்கோ’, 2022-ம் ஆண்டு வெளியான ‘ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்தார்.

இவை அனைத்துமே அதிதிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதிதி. இந்நிலையில் நடிகை அதிதி ராவ் மற்றும் சித்தார்த் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவரும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர் தான். 

அதிதி, சித்தார்த் தங்களுடைய காதல் குறித்து வெளிப்படையாக பேசவில்லை. எனினும், பல்வேறு பொதுநிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாகவே கலந்துகொள்கின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் பாடல் வெளியீட்டு விழாவில் கூட, இருவரும் ஒன்றாக பங்கேற்றனர். அவ்வப்போது சமூகவலைதளங்களில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிடுகின்றனர். 

இந்நிலையில்  அண்மையில் இருவரும் பொதுநிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர். அப்போது  ஜோடியாக ஒரு போஸ் கொடுத்த போது, ஒரு போட்டோகிராபர் ‘லவ்லியான ஜோடி’ என்கிற கத்தினார். அதற்கு அதிதி வெட்கத்துடன் புன்னகை புரிந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் சித்தார்த் உடனான காதலை அவர் மறைமுகமாக அறிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

From Around the web