பெரிய இயக்குநருடன் கூட்டணி சேரும் ஷங்கர் மகள்- இப்பட ஹீரோ யார் தெரியுமா..??
கார்த்தி நடிப்பில், ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் வெளியான ‘விருமன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி ஷங்கர். இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள். விருமன் படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், அதிதியின் நடிப்பு பலரையும் ஈர்த்தது.
அதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அடுத்த வாரத்தில் அனைத்து முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளன.
தற்போது அதிதி ஷங்கர் நடிக்கும் மூன்றாவது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணு வர்த்தன், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷை ஹீரோவாக்கி படம் இயக்கவுள்ளார்.
அந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை மாஸ்டர், லியோ பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆகாஷ், சேவியர் பிரிட்டோவில் சொந்த மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.