லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்.. அதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே அவரது நடிப்பில் இதுவரை வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது அவர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும், ராம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’மாமுண்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.