ரசிகரின் போனை பிடுங்கி வீசிய ஆதித்ய நாராயணன்!

 
1

இசையமைப்பாளர்களும்,பாடகர்களும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமாக நடக்கும் நிகழ்வாக காணப்படுகிறது.

இந்த நிலையில், பாலிவுட் பாடகர் ஒருவர், தனது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு ரசிகரின் செல்ஃபோனை பறித்தெடுத்து வீசிய சம்பவம் பெரிதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

பாலிவுட்டின் பிரபலமான பாடகர்களில் ஒருவர் தான் ஆதித்ய  நாராயணன். இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பங்கு பற்றியுள்ளார்.

சதீஸ்கரில் உள்ள பிலாய் நகரில் உள்ள கல்லூரி இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தி இருந்தார். இதன் போது ஷாருக்கான் நடித்த டான் படத்தில் ஆஜ் கீ ராத் என்ற பாடலை ஆதித்ய பாடிக் கொண்டிருந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இவ்வாறு குறித்த மேடையில் ஆதித்ய பாடிக் கொண்டிருக்கும் போது , அவரை சுற்றி பல ரசிகர்கள் போனில் செல்பி எடுக்க முனைந்துள்ளனர்.

அப்படி செல்பி எடுக்க முனைந்த ஒரு ரசிகரின் போனை வாங்கி பிடுங்கிய ஆதித்ய, அதனை அந்த கூட்டத்திற்கு நடுவே வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல் தொடர்ந்து பாடலை பாட ஆரம்பித்துள்ளார்.தற்போது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

இதேவேளை, குறித்த பாடகரின் இந்த செயற்பாடு பலரையும் முகம் சுளிக்கும் வண்ணம் செய்துள்ளது. அது போலவே அவரின் இசையை ரசிக்க சென்ற பல ரசிகர்களுக்கும் இது ஒரு சரியான பாடம் என நெட்டிசன்கள் தமது கருத்துக்களை குவித்து வருகின்றனர். 

From Around the web