வேற லெவெலில் இந்தியன் 2 படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரம்..!

 
1

இந்தியன் 2 திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் ‘கதறல்ஸ்’ மற்றும் ‘பாரா பாரா’ பாடல்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், கபிலன் வைரமுத்து வரிகளில் சுவி மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ள காலண்டர் பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷனில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறே சமீபத்தில் வித்தியாசமான முறையில் துபாய் நாட்டில் பாராசூட் மூலம் இந்தியன் 2 படத்தின் போஸ்டரை வைத்துக்கொண்டு பறந்து திரிந்து விளம்பரம் செய்துள்ளனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


 


 

From Around the web