19 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் ரஜினி கமல் படம்..!! 

 
1

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. ஜெயில் கதைக்களம் கொண்ட இப்படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

rajini vs kamal

அதேபோன்று கமலஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது ‘இந்தியன் 2’. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

rajini vs kamal

இந்நிலையில் ஜெயிலர் மற்றும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களும் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக ரஜினியின் சந்திரமுகியும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. தற்போது 19 வருடங்களுக்கு பிறகு ரஜினி - கமல் படங்கள் ஒன்றாக வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

From Around the web