லியோ படம் முடிந்தவுடன் ஆரம்பமாகும் தளபதி 68..!!

லியோ படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த உடனே, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படம் துவங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
leo movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் லியோ படம். இன்னும் ஒரு வார படப்பிடிப்பு பணிகள் மட்டுமெ பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. காஷ்மீரின் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொண்டைக்கானல், ஹைதராபாத், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றது.

அடுத்ததாக சென்னை மற்றுல் தலைக்கோணத்தில் ஒரு வாரம் ஷூட்டிங் மட்டும் பாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. அது முடிந்தால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து லியோ படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது.

leo movie

முன்னதாக லியோ படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 19-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முடிந்த கையுடன் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் கலந்துகொள்கிறார். பொதுவாக விஜய் ஒவ்வொரு படங்களில் நடிப்பதற்கு முன்னர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

venkat prabhu

ஆனால் இம்முறை அதை தவிர்த்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு இறுதிக்குள் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட வேண்டும் என்பதை அவர் இலக்காக நிர்ணயித்துள்ளாராம். அந்த வகையில் விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் துவங்கும் என வெங்கட் பிரபுவின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
 

From Around the web