அடுத்ததாக ரஜினிகாந்த் மருமகனை இயக்கும் நெல்சன்..!!
தமிழில் கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அதையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதன்மூலம் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆஃப்ஸில் படுதோல்வி அடைந்தது. இதற்கு நடிகர் விஜய் திரைக்கதையில் செய்த தலையீடு தான் காரணம் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அண்மையில் முடிவடைந்தன. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், ஜெயிலர் படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் சிங்கிள் வெளியாகி தமிழக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் நடிகர் தனுஷின் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம்ப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.