சமந்தாவை அடுத்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கை விளாசிய தெலுங்கானா அமைச்சர்..! 

 
1

சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெற பி.ஆர்.எஸ். தலைவர் கே.டி.ஆர். தான் காரணம் என தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். இதையடுத்து சமந்தா, நாக சைதன்யா, நாகர்ஜுனா, அமலா, அகில் ஆகியோர் கொண்டா சுரேகாவை விளாசி ட்வீட் செய்தார்கள், இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டார்கள். மேலும் திரையுலகினரும் கொண்டா சுரேகாவை விளாசினார்கள். இதையடுத்து சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டார் சுரேகா.

கே.டி.ஆர். சில நடிகைகளுக்கு போதைப் பொருள் கொடுத்து அவர்களை போதைக்கு அடிமையாக்கினார் என்கிறார் சுரேகா. இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் பற்றியும் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-

சமந்தாவுக்கு நடந்த அநீதிக்கு காரணம் கே.டி.ஆர். போதைப் பொருள் வழக்குகளால் இரண்டு, மூன்று ஹீரோயின்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டார்கள். ரகுல் ப்ரீத் திருமணம் செய்து கொண்டார். மேலும் இரண்டு, மூன்று ஹீரோயின்களும் திருமணம் கொண்டார்கள். எதற்காக நாம் இந்த போதைப் பொருள் வழக்கு தலைவலியை பொறுத்துக் கொண்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
முன்னதாக அவர்களிடம் இருந்த அதிகாரத்தை வைத்து போன்களை டேப் செய்தார்கள், பேசியதை பதிவு செய்து அதை வைத்து மிரட்டினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

கிரியேட்டிவிட்டி, ப்ரொஃபஷனலிசத்திற்கு பெயர் போனது தெலுங்கு திரையுலகம். இந்த அழகான துறையில் என் பயணம் சிறப்பானது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பெண்களை பற்றி ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதை பார்த்து வேதனையாக உள்ளது. பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணே இதை செய்கிறார் என்பது தான் வேதனை. கண்ணியம் கருதி நாங்கள் அமைதியாக இருந்தால் அதை பலவீனம் என தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

எனக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவருடனும் தொடர்பு இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக என் பெயரை கெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அரசியல் பிரச்சனையில் கலைஞர்களை இழுக்க வேண்டாம். ஹெட்லைனில் வர பொய்யான கதையில் அவர்களின் பெயரை சேர்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்கின் ட்வீட்டை பார்த்தவர்களோ, தயவு செய்து இத்துடன் நிறுத்த வேண்டாம். கொண்டா சுரேகா மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரவும். நாகர்ஜுனா அப்படித் தான் செய்திருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

From Around the web