மறுபடியும் மொதல்ல இருந்தா..? பீஸ்ட் படக்குழு திடீர் முடிவு..!

 
பீஸ்ட் படத்தில் விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்குக்காக மீண்டும் நடிகர் விஜய் ஜியார்ஜியா செல்கிறார்.

சென்னை  ஃப்லிம் சிட்டியில் ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. தற்போது குறிப்பிட்ட சில காட்சிகளை எடுப்பதற்காக மீண்டும் படக்குழு ஜியார்ஜியா செல்ல ஆயத்தமாகி வருகிறது.

இதுவரை 80 சதவீத ஷூட்டிங் பணிகள் முடிந்துவிட்டன. விஜய் இந்த படத்தில் கான் ஏஜெண்ட்டாக நடிக்கிறார். முந்தைய நெல்சன் திலீப்குமார் படங்களை போல, இதுவும் பிளாக் காமெடி த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ளது.

பூஜா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஷைன் டைம் சாக்கோ, செல்வராகவன் வில்லன்களாக நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
 

From Around the web