மறுபடியுமா ? மீண்டும் வெளியாகிய ராஷ்மிகா மந்தனா டீப் பேக் வீடியோ..!

 
1

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ ஏற்கனவே வெளியாகி பரபரப்பானது. இன்னொரு பெண்ணின் உடலோடு ராஷ்மிகாவின் முகத்தை ஒட்டி ஆபாசமாக உருவாக்கி இருந்தனர். இது தனக்கு வேதனை அளிப்பதாகவும், பயமாகவும் இருக்கிறது என்று ராஷ்மிகா கண்டித்து இருந்தார். வீடியோவை வெளியிட்டவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தற்போது ராஷ்மிகாவின் இன்னொரு டீப் பேக் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இதில் ராஷ்மிகா சிவப்பு நிற நீச்சல் உடை அணிந்து ஒரு நீர் வீழ்ச்சியின் கீழே நின்று இருப்பது போன்ற காட்சி உள்ளது. பின்னணியில் ராஷ்மிகா நடித்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடலும் ஒலிக்கிறது.

இந்த வீடியோவை உண்மை என்று நம்பி பலர் அதிர்ச்சியாகி பதிவுகள் வெளியிட்டனர். அதன்பிறகுதான் போலி வீடியோ என்று தெரிய வந்தது. ஒரிஜினல் வீடியோவில் கொலம்பியன் மாடல் அழகி டேனியேலா வில்லாரியல் பிகினி உடையில் இருக்கிறார். அவரது முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை டீப் பேக் தொழில் நுட்பம் மூலம் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


 

From Around the web