'நவரஸா’வில் கார்த்திக் நரேன் இயக்கும் அக்னி..!

 
கார்த்திக் நரேன்

நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக தயாராகி வரும் ‘நவரஸா’ என்கிற ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் கார்த்தி நரேன் இயக்கும் படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நவரஸா’. இது நெட்ஃப்ளிக்ஸ் தளத்திற்காக தயாரிக்கப்பட்டு வரும் ‘ஆந்தாலஜி’ படமாகும். இப்படத்தில் மொத்தம் 9 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் ‘அக்னி’ படம் குறித்து அவரே கூறியுள்ளார். அதன்படி அக்னி படத்தில் அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெறும் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த கதை நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். கதையை ரெடி பண்ணியதும் அரவிந்த் சாமியிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்துவிட்டது. உடனடியாக அதற்கான ஷூட்டிங் பணிகளை துவங்கினோம். படம் சிறப்பாக வந்துள்ளது.

இந்த படத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் கொரோனாவால் வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படவுள்ளது. அதை நினைக்கும் போது மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

நான்கு சுவர்களுக்குள் தனியே அமர்ந்து பார்க்கும் படங்களுக்கு சென்சார் தேவையில்லை என்பது என்று. ஓடிடியில் படங்கள் ரிலீஸாவது என்பது காலத்தின் கட்டாயம். எனினும் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்ப்பது என்பது தனி சுகம் தான் என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
 

From Around the web