திருப்பதி கோயிலில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா வழிபாடு..!
Sep 24, 2021, 12:23 IST
ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது. அதை முன்னிட்டு அவருடைய மகள்கள் இருவரும் திருப்பதி கோயிலி வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கோயிலுக்கு ஐஸ்வர்யா தனுஷ் தனியாக வந்தார். ஆனால் சவுந்தர்யா தனது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோருடன் வந்திருந்தார். தற்போது சவுந்தர்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொன்னியின் செல்வன் நாவலை வெப் தொடராக உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த தொடரை அவர் எம்.எக்ஸ் பிளேயருடன் இணைந்து தயாரிக்கிறார். விரைவில் இந்த தொடருக்கான முதல் சீசன் துவங்கப்படவுள்ளது.
 - cini express.jpg)