போர் அடிக்காமல் இருக்க சண்டை போடும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்..!

 
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்

கணவரும் எப்போதும் சண்டை தான் என்று சமீபத்திய நேர்காணலில் ஐஸ்வர்யா ராய் பேசியது தொடர்பாக கணவர் அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய 48-வது பிறந்தநாளை கடந்த நவம்பர் 1-ம் தேதி கொண்டாடினார். அப்போது அவருடைய பேட்டி ஒன்று நாளிதழில் வெளியானது.

அதில் கணவர் அபிஷேக் பச்சனுடன் எப்போதும் சண்டை தான் என்று வருத்தம் தெரிவித்திருந்தார். இது பாலிவுட் சினிமாவில் பூதாகரம் எடுக்க, தற்போது இந்த விவகார்ம தொடர்பாக அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

எங்களுக்குள் சண்டை இல்லை, கருத்து வேறுபாடுகள் என்று கூறலாம். எப்போதும் சீரியஸாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்தால் போர் அடித்து விடும். சண்டை போடுவது ஆரோக்கியமானது தான்.

எங்களுக்குள் எப்போது சண்டை வந்தாலும் நான் தான் முதலில் சமாதானம் செய்வென். அவ்வளவு சீக்கிரம் ஐஸ்வர்யா சமாதானம் ஆகமாட்டார். எனினும் சண்டை போட்டால் சமாதானம் ஆகாமல் தூங்கச் செல்லக் கூடாது என்று ஒரு விதிமுறையை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்.

மனைவிக்காக கணவர் விட்டுக்கொடுப்பது தவறில்லை. எவ்வளவு விட்டுக்கொடுத்து செல்கிறோமோ அது அவ்வளவு நல்லது என்று நடிகை அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
 

From Around the web