ஐஸ்வர்யா ராய் புகைப்படம் லீக்- மணிரத்னம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை..!

 
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது படக்குழுவினரை நேரடியாக அதிருப்தி அடையச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் தற்போது மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நடந்து வருகிறது. அங்கு படத்தில் நடித்து வரும் அனைவரும் பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக குவாலியரில் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த போது, ஐஸ்வர்யா ராய் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் கசிந்தன. இதனால் படக்குழு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக மணிரத்னம் பெருமளவில் கோபம் அடைந்தது தெரிய வருகிறது.

இன்னும் ஒரு சில நாட்களே அங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முடிந்தவரை பொதுமக்களை உள்ளே அனுமதிக்காத வகையில் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web