மலையாளத்தில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராய்- அதுவும் இந்த ஹீரோவுடன்..?

தமிழில் மட்டுமே நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், முதன்முறையாக மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளார். 
 
aishwarya rai

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படம் சினிமாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா ராய். அதை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். எனினும், அவ்வப்போது ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்டோர் படங்களில் வாய்ப்பு வரும் தமிழில் நடித்து வந்தார்.

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். அதற்காக அவருக்கு சக நடிகர்களும், திரைத்துறை பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் மலையாள சினிமாவில் நடிக்கவுள்ளார். விரைவில் நடிகர் திலீப் நடிக்கும் 148-வது படம் தாயாராகவுள்ளது. அதில் தான் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது.

dileep

இந்த தகவலை மலையாள சினிமாவின் பிரபல போட்டோகிராஃபர் ஷாலு என்பவரும் உறுதி செய்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல நடிகை கடத்தி பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்டு அதற்கான வழக்கு விசாரணையில் உள்ளது. 

திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரும் ஐஸ்வர்யா ராயும் நல்ல நண்பர்கள் ஆவர். இப்படியொரு சிக்கலில் ஐஸ்வர்யா ராய் திலீப்புடன் நடிக்க ஒப்புக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web