ஐஸ்வர்யா ராய் மகள் உடல்நிலை குறித்து மோசமாக பதிவிட்ட யூடியூப் சேனல்கள்!

 
1

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சனின் மகளுமான ஆராதயா பச்சன் குறித்து சில தினங்களுக்கு முன்பு சில யூடியூப் சேனல்கள் மிகவும் மோசமான வீடியோக்களை வெளியிட்டனர். அதில் ஆராதயா உடல்நிலை குறித்தும், அவருக்கு மோசமான நோய் இருப்பதாகவும் சொல்லியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு இதனால் ஐஸ்வர்யா ராய் தனது கணவரை பிரிந்துவிட்டதாகவும் அவர்கள் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். 

எல்லைமீறி இப்படி கேவலமான செயலில் ஈடுபட்ட யூடியூபர்களுக்கு எதிராக பல பிரபலங்களும் குரல் எழுப்பினர். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளனர். 11 வயதாகும் ஆராதயா பச்சன் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கை நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை செய்தது.ஒரு குழந்தை குறித்த தவறான தகவல்களை பரப்புவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டம் ஒருபோதும் அதனை அனுமதிக்காது. சாமானியரின் குழந்தையாக இருந்தாலும், பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் ஒரே போல் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும்.அதனை உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம் ஆரத்யா தொடர்பான தகவல்களை வெளியிட தடைவிதித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட வீடியோக்களை முடக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், தவறான தகவல்களை பரப்பியது குறித்து பதிலளிக்க ஒன்பது யூடியூப் சேனல்களுக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பியும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

From Around the web