கொரோனாவால் ஏற்பட்ட கொடுமை- கவலையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 
ஐஸ்வர்யா ராஜேஷ்

கொரோனாவால் தொடர்ந்து தான் நடித்துள்ள படங்கள் பாதிக்கப்பட்டுவது தமிழில் வளர்ந்து வரும் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷை கவலையடைச் செய்துள்ளது.

தமிழில் மாற்று கருத்துடன் தயாராகி வரும் படங்களில் நடிப்பதற்கு முதல் சாய்ஸாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அது ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை பெறும். 

தற்போது இவர் டிரைவர் ஐமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

அதை இன்னும் இருதரப்பினரும் உறுதி செய்யவில்லை. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படன் திட்டம் இரண்டு.

இந்த படம் திரையரங்கு வெளியீட்டை குறிவைத்து எடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் படக்குழு புதிய முடிவை எடுத்துள்ளது.

அதன்படி திட்டம் இரண்டு படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் ஜூலை 30-ம் தேதி சோனி லைவ் தளத்தில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து தன்னுடைய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவது ஐஸ்வர்யா ராஜேஷை கலக்கமடையச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web