தனுஷிடம் இருந்து விவகாரத்துக் கோரி ஐஸ்வர்யா மனுத்தாக்கல்..!!

போயஸ் கார்டனின் நடிகர் தனுஷ் கட்டியுள்ள புதிய வீடு, ரஜினிகாந்த் வீட்டுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இதனால் விரைவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைவார்கள் என்று நம்பப்பட்டது.
 
dhanush and aishwarya rajinikanth

நடிகர் தனுஷும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்வதாக செய்திகள் வெளியாகி நீண்ட நாட்களாகிறது. ஆனால் இருவரும் அதிகாரப்பூர்வமாக இன்னும் பிரியவில்லை. மேலும் இதுதொடர்பாக எந்தவிதமான சட்டமுன்னெடுப்புகளும் நடைபெறவில்லை.இந்நிலையில் தனுஷிடம் இருந்து விவாகரத்து கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சிவராத்திரி தினத்தன்று போயஸ் கார்டனில் தனுஷ் கட்டியுள்ள புதிய வீட்டை தனது பெற்றோருக்கு கனவு பரிசாக கொடுத்தது பெரும் செய்தியாக அமைந்தது. அங்கு பிரபலங்கள் அனைவரும் அவரை சந்தித்து வருகின்றனர். இந்த வீட்டின் மொத்த மதிப்பு ரூ. 150 கோடியாகும். ஆனால் இதுவரை தனுஷை, ரஜினி குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை. மேலும் வீட்டுக் கிரஹப்பிரவேசத்தில் அவருடைய மகன்களும் பங்கேற்கவில்லை. 

aishwarya rajinikanth

தனுஷ் தனது பெற்றோருக்காக கட்டிய வீடு, மாமனார் ஜினிகாந்தின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் உள்ளது. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இருவரும் பிரிந்து செல்வதாக சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் பிரிவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை இன்னும் எடுக்கவில்லை என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர்கள் இருவரும் பிரிவதில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை, மேலும் அவர்களை ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விவகாரத்தில் ரஜினிகாந்தே நேரடியாகத் தலையிட்டு இருவருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்தினார். தனுஷின் புதிய வீடு ரஜினியின் வீட்டிற்கு அருகில் இருப்பதாகவும், இதுவே இருவரும் இணைவதற்கான அறிகுறி என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அண்டை வீட்டாராக மாறுவதால் இரு குடும்பங்களும் நெருக்கமாகிவிடும் என்று ரஜினி நம்புவதாக கூறப்பட்டது. 

Dhanush

அதேபோன்று பிரிவினை அறிவிப்புக்குப் பிறகும் தனுஷும் ஐஸ்வர்யாவும் பொது இடங்களில் ஒன்றாகக் காணப்பட்டனர். இருவரும் தங்கள் குழந்தைகளின் பள்ளி விஷயங்களுக்கு ஒன்றாக வருவார்கள். அவர்களின் குழந்தைகள் யாத்ரா மற்றும் லிங்கா அடிக்கடி அவர்களுடன் காணப்படுகின்றனர். சமீபத்தில் வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தனது குழந்தைகளை தனது சிறந்த நண்பர்களாக கருதுவதாக கூறினார். 

இந்நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷிடம் இருந்து விவகாரத்துக் கோரி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்துள்ளதாக திரைப்பட விமர்சகர் உமைர் சந்து செய்தி வெளியிட்டுள்ளார். அவரது ட்வீட்டில், தனுஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் ஐஸ்வர்யா விவகாரத்து முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளார். விரைவில் தனுஷும் பதில் மனுத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web