தமிழ், தெலுங்கில் படம் இயக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தை இயக்கவுள்ளார். அதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் இந்த படத்தையும், படக்குழுவையும் உலகளவில் பிரபலப்படுத்தியது.

அதை தொடர்ந்து அவர் கவுதம் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். ஆனால் இப்படம் பெரியளவில் எதிர்பாராத வெற்றியை பெறவில்லை. இதன்காரணமாக அவர் நீண்ட காலமாக படங்கள் எதுவும் இயக்கவில்லை.

தற்போது 6 ஆண்டுகள் கழித்து புதிய படத்தை இயகக்வுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ளது. சஞ்சீவி என்பவர் இந்த படத்துக்கான கதையை எழுதியுள்ளார். தற்போது படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

விரைவில் இந்த படத்தில் யாரெல்லாம் பணியாற்றவுள்ளார். எப்போது படப்பிடிப்பு துவங்கும், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web