அப்பாவை வைத்து தம்பி மனைவி இயக்கும் படத்தில் செல்வராகவன்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில், தனது மைத்துனரும் இயக்குநருமான செல்வராகவனை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 
 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் செல்வராகவன்

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலினி போன்ற படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் செல்வராகவன். நீண்ட ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் இவர், விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

அதையடுத்து ’சாணிக் காயிதம்’, ‘பகாசூரன்’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து புதியதாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவனை நடிக்க வைக்க ஐஸ்வர்யா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.


முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதன்காரணமாக அவர் தனது படத்தில் செல்வராகவனை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செல்வராகவனின் உடன்பிறந்த சகோதரர் தனுஷ், ஐஸ்வர்யாவின் கணவர் ஆவார். அவர்கள் இருவரும் பிரிந்து வாழ விரும்புவதாக 6 மாதங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டனர். ஆனால் குடும்பத்திற்குள் சமரசம் பேசி மீண்டும் தம்பதிகள் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக செல்வராகவனை தான் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவைக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன்மூலம் விரைவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ்வது சாத்தியமாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

From Around the web