ரஷ்யாவில் 5000 கி.மீ பைக் டூரிங் செய்யும் அஜித் குமார்..!

வலிமை படத்துக்காக அஜித்குமார் ரஷ்யா சென்றபோது, அந்நாட்டில் அவர் பைக் டூரிங்கில் ஈடுபட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கான ஷூட்டிங் பணிகள் ரஷ்யாவில் நடைபெற்று வந்ததை அடுத்து முடிவடைந்துள்ளன. விரைவில் சென்னை திரும்பும் படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில் நடிகர் அஜித் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் பைக் டூரிங்கில் ஈடுபட்டுள்ளார். சுமார் 5000 கி.மீ சுற்றுப்பயணத்தில் அவர் ஈடுபட இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை அவர் பயணம் மேற்கொண்ட இடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சென்னை திரும்பியதும் வலிமை படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. அதை தொடர்ந்து படத்தை தீபாவளி பண்டிக்கை வெளியிட தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.