அஜித் 62 அப்டேட் இப்போதைக்கு வராது..!!
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62-வது படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முன்னதாக இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான சில மாதங்களில்,
விக்னேஷ் சிவன் கதை எழுதும் பணியில் சிறு சுணக்கம் காட்டியதாகவும், அது அஜித்துக்கு பிடிக்கவில்லை என்பதால், அவர் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் அஜித் 62 படத்துக்கான புதிய இயக்குநரை தேடும் பணிகள் நடைபெற்று வந்தன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று தகவல் வெளியானது. அஜித்திடம் அவர் இரண்டு ஸ்பை த்ரில்லர் கதைகளை சொல்லியுள்ளதாகவும், அவை இரண்டுமே அஜித்துக்கு பிடித்துவிட்டதாகவும், விரைவில் அவற்றில் விரைவில் ஒரு படம் உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் அஜித் உலக சுற்றுப் பயணம் சென்றதன் காரணமாக, அறிவிப்பு தாமதமானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணி காலமானார். அப்போது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்த அஜித் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக சென்னைக்கு திரும்பி இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
இதனால் அஜித்தின் 62-வது படத்துக்கான அறிவிப்பு மேலும் தள்ளிப்போகும் என்று தெரியவந்துள்ளது. எனினும், லைகா நிறுவனத்தை மேலும் காக்கவைக்க அஜித் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வரும் மே மாதம் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.