அஜித் 62 படம் அறிவிப்பு வெளியாக தாமதம் ஏன்? என்ன செய்கிறது லைக்கா..??
![magizh thirumeni](https://ciniexpress.com/static/c1e/client/77058/uploaded/d873f11e052879f305b3fdafb6644e19.jpg)
நடிகர் அஜித்தின் 62-வது படத்தை மகிழ் திருமேணி இயக்குவது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றாலும், இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாமல் இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கதை எழுதுவதற்கு தாமதம் ஏற்படுத்தியதை அடுத்து, அவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டது லைக்கா.
இதையடுத்து அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேணிக்கு வழங்கப்பட்டது. இது ஏறத்தாழ உறுதிசெய்யப்பட்டுவிட்ட நிலையில், இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2 வார காலம் சென்றும் இன்னும் லைக்கா நிறுவனம் அறிவிக்கவில்லை.
அஜித் 62-வது படத்திற்கு ஏற்பட்டு வரும் காலதாமதம் குறித்த தகவல் இப்போது தெரியவந்துள்ளது. நடிகர் அஜித் தற்போது குடும்பத்துடன் உலக சுற்றுலா சென்றுள்ளார். சுமார் ஒருமாத காலம் அவர் சுற்றுலாவில் இருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஏப்ரல் மாதத்தில் அஜித் வீடு திரும்புவார் என்றும், அப்போது ‘அஜித் 62’ படம் தொடர்பான அறிவிப்பை லைக்கா புரோடக்ஷன்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த காலதாமதம் தொடர்பான முடிவை படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா அறிவுறுத்தல் பேரில் தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.