நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித். தீயாக பரவும் வீடியோ..!

 
1

துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.இந்நிலையில், நடிகர் அஜித் நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்டார். அதாவது, அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே பாவனா வர.. அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார். அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித்- பாவனா ‘அசல்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web