அஜித் ரசிகர்கள் சோகம்..! சாட்லைட்டில் விலை போகாத விடாமுயற்சி திரைப்படம்..!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா நடிப்பில் இந்த மாதம் 6 ஆம் தேதி வெளியாகி கலவனான விமர்சனத்தினை பெற்று வருகின்றது. நீண்ட இடைவெளியின் பின்னர் அஜித் படம் வெளியாகியமையினால் பெரிய எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்றே சொல்லாம்.
அஜித் ரசிகர்கள் வசூல் அளவை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் படம் நல்லா ஓடவில்லை என்பது தான் தியேட்டர் வட்டாரங்களில் இருந்து வெளிவந்துள்ள செய்தியாக இருக்கின்றது. இப் படத்தின் படு தோல்வியினால் அடுத்து வெளியாகவுள்ள அஜித் படமான குட் பேட் அக்லியின் கேள்வி குறைந்துள்ளது.
இந்த நிலையில் இப் படத்தின் ஹிந்தி சாட்லைட் உரிமையினை படம் வெளியாவதற்கு முன்னர் ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தற்போது தியேட்டர் விமர்சகர்களின் விமர்சனங்களின் பின்னர் குறித்த நிறுவனம் படத்தினை திருப்பி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.