அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..! ‘விடாமுயற்சி’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜர்பைஜான் நாட்டில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் பிறகு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இரு புதிய போஸ்டர்களை படக்குழு இன்று (ஜூலை 7) வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 30-ம் தேதி புதிய தோற்றம் வெளியான நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.
EFFORTS NEVER FAIL#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra #NikhilNair @omdop @srikanth_nb @MilanFern30 @supremesundar @itsanuvardhan @anand16na @gopiprasannaa… pic.twitter.com/bf8kndGdcQ
— Lyca Productions (@LycaProductions) July 7, 2024
தற்போது வெளியாகியுள்ள செகண்ட் லுக் போஸ்டரில் பரபரப்பான ஆக்சன் காட்சியில் நடிகர் அஜித் கார் ஓட்டுவது போன்றும், கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருப்பது போன்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. இப்படங்களை வெளியிட்டு, “முயற்சிகள் ஒருபோதும் தோற்பதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.
 - cini express.jpg)