கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்..!  தளபதி விஜய் பட சாதனையை முறியடித்த 'குட் பேட் அக்லி'..!

 
1

ஏகே நடிப்பில் கடைசியாக 'விடாமுயற்சி' வெளியானது. மகிழ் திருமேனி இயக்கத்தில் ஓராண்டுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் எக்கச்சக்கமான காத்திருப்பில் இருந்தனர். இதனையடுத்து ஒரு வழியாக கடந்த மாதம் வெளியானது 'விடாமுயற்சி'. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் வசூலையும் குவிக்கவில்லை.

'விடாமுயற்சி' படத்தில் ஏகேவின் மாஸ் காட்சிகள் இல்லை என ரசிகர்கள் பெரிதும் வருத்தப்பட்டனர். அவர்களை கொண்டாட வைக்கும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தினை இயக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தரமான பேன் சம்பவமாக உருவாகியுள்ள இப்படத்தினை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

'குட் பேட் அக்லி' மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், நேற்றைய தினம் இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியிடப்பட்டது. அஜித் ரசிகர்களுக்காகவே ஆதிக் ரவிச்சந்திரன் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளதை போன்று டீசர் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மாஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் வேறலெவல் வரவேற்பினை பெற்று வருகிறது.

ஏகேவின் ஸ்டைலிஷ் லுக்குகள், மாஸ் காட்சிகள், தரமான டையலாக்குகள் என ஏகே ரசிகர்களுக்கான தரமான விருந்தாக 'குட் பேட் அக்லி' டீசர் வெளியாகியுள்ளது. அத்துடன் வாலி, பில்லா, அட்டகாசம், வேதாளம் படங்களின் லுக்கிலும், மேனரிசத்திலும் ஏகே தெறிக்க விட்டுள்ளார். இதனால் ஏகே ரசிகர்களுக்கான தரமான ட்ரீட்டாக 'குட் பேட் அக்லி' டீசர் அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் எந்தவொரு படத்தின் டீசரும் 12 மணி நேரத்தில் இந்தளவு பார்வையாளர்களை பெறவில்லை. முன்னதாக விஜய்யின் 'லியோ' டிரெய்லர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியிருந்தது.

இந்நிலையில் 'குட் பேட் அக்லி' 12 மணி நேரத்தில் 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதால், விரைவில் லியோவின் சாதனையை ஏகேவின் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'குட் பேட் அக்லி' படத்தில் திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web