சாமி வந்து ஆடியவரிடம் வலிமை அப்டேட் கேட்டு தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்..!

 
வலிமை அப்டேட்

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு தமிழகத்தை அலறவிடுவது ரசிகர்களின் வழக்கம். அவர்களுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பது போல மீண்டும் நடந்துள்ளது மற்றொரு வைரல் சம்பவம்.

பாலிவுட்டைச் சேர்ந்த போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. சுமார் ஒன்றரை வருடங்களாக இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை படம் தொடர்பான எந்தவித அப்டேட்டும் வரவில்லை.

இதனால் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரசிகர்கள் பொங்க தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தலைவர்களிடம் வலிமை அப்டேட்டை வாங்கி தருமாறு கேட்டனர்.

அதேபோல கிரிக்கெட் போட்டிகளின் போதும் பல்வேறு வீரர்களிடையே வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் மிரள வைத்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரும் நிச்சயமாக படத்தின் அப்டேட்டைக் கொடுப்பார்கள். அதுவரை, ரசிகர்கள் தயவுசெய்து பொறுமையாக இருக்கும்படி அஜித் தரப்பில் அறிவிப்பு வந்தது.

ஆனால் ரசிகர்கள் பொறுமையாக இருப்பது போல தெரியவில்லை. இந்நிலையில் இந்த நிலையில் சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் சொல்லுங்க, அதுதான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

From Around the web