நீதிமன்றத்தில் ஆஜரான அஜித் பட நடிகை..!!

 
1

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

Manju warrier

இதையடுத்து இரண்டாம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. 

அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இரண்டாம் கட்ட விசாரணைக்காக கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். 

Manju warrier

மஞ்சு வாரியர் உட்பட நான்கு பேரிடம் தற்போது விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கை இன்னும் ஆறு மாதத்திற்குள் முடித்துவிட கேரள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

From Around the web