ரூ.15 லட்சம் மதிப்பிலான் பைக்கை கிஃப்ட் கொடுத்த அஜித்- யாருக்கு தெரியுமா?
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து வரும் அஜித், படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் போட்டோகிராஃபி, துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் பயிற்சி போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இதுதவிர பிஎம்டபுள்யூ சூப்பர் பைக்கில் அடிக்கடி அவர் டூரிங் சென்றுவிடுவதும் வழக்கமாக உள்ளது.
அண்மையில் ஏ.கே. மோட்டோ ரைடு என்கிற பெயரில் புதியதாக நிறுவனம் துவங்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டார் அஜித் குமார். இந்நிறுவனம் இருசக்கர வாகனத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு, பைக்குகளை வழங்கும். அவரவர் விருப்பத்துக்கு ஏற்றார் போல பைக்குகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
நடிகர் அஜித் அடிக்கடி பைக் டூரிங் செல்வதற்கு உதவியாக இருந்தவர் சுகத். வட இந்தியாவைச் சேர்ந்த இவருக்கு அஜித் BMW F850 GS என்கிற சூப்பர் பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். இந்தியாவில் இந்த பைக்கின் ஆன்ரோடு விலை ரூ. 15 லட்சமாகும்.
இந்த சுகத் தான் அஜித் சிக்கிம், அசாம் உள்ளிட்ட வடக்கிழக்கு மாநிலங்களில் டூரிங் செல்வதற்கு உதவியாக இருந்துள்ளார். மேலும் அவரும் அஜித்துடன் சேர்ந்து பயணித்துள்ளார். அதற்கு கைமாறூ செலுத்தும் விதமாகவே அஜித் சுகத்துக்கு பைக்கை பரிசாக கொடுத்துள்ளார்.