மூன்றாவது முறையாக இணையும் அஜித் - ஹெச். வினோத் - போனி கபூர்..!

 
போனி கபூர் மற்றும் அஜித்

நடிகர் அஜித் நடிக்கும் 61-வது படத்துக்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்கிற தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹெச். வினோத் குமார் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதனுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் பங்கேற்று வருகிறார்.

வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அஜித் நடிக்கும் 61-வது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் ஹெச். வினோத் இயக்குவார் என்றும், போனி கபூரே படத்தை தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, தல 61 என்கிற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டாங்கி வருகின்றன. மேலும், வலிமை படம் போன்று அல்லாமல், இப்படத்தை சீக்கரம் துவங்கி சீக்கரம் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web