இப்படி ஒரு அழகான மனம் படைத்தவர் தான் அஜித்..!

 
1

அஜித் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்…

மிகவும் பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன்,திரிஷா, ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது…பலரும் படத்தில் இணைந்துள்ளனர் என்றும் தகவல் வருகின்றது…விறுவிறுப்பாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது…நிறைய அப்டேட் விரைவில் வரும் என்றும் சொல்லப்படுகின்றது..

60 நாட்கள் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே அசர்பைஜானில் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது முழு படத்தையும் அங்கேயே முடித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்…அதற்காக கதையை மாற்றி அமைந்துள்ளதாக தெரிகின்றது…இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அடிக்கடி சில புகைப்படங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது..

இந்நிலையில் தற்போது அஜித்தின் போட்டோ ஒன்றும் வைரலாகி வருகிறது…அதில் ஒரு வயதான பெண்மணி வீல் சேரில் இருந்தபடி அஜித்தை அரவணைக்க முயற்சிக்கிறார் அஜித்துக்கும் அவரது தோள்மீது கை போட்டு போட்டோ எடுத்துள்ளார்…இப்படி ஒரு அழகான மனம் படைத்தவர் தான் அஜித் அவர்கள் என ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர்..

 

From Around the web