விக்னேஷ் சிவனும் இல்லை; மகிழ் திருமேனியும் இல்லை- அஜித் அடுத்த படம் இதுதான்..!!

அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வேறொரு படத்தில் அஜித் நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
magih thirumeni

அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படம் நல்ல வரவேற்பை பெற்று, எதிர்பார்த்த அளவுக்கு வசூலீட்டியது. முன்னதாகவே அஜித்தின் 62-வது படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் விக்னேஷ் சிவன் எழுதிய கதை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அஜித் இருவருக்கும் பிடிக்காத நிலையில், அஜித் 62 படத்துக்காக வேறொரு இயக்குநரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அப்போது மகிழ் திருமேனி தான் அஜித் படத்தின் இயக்குநர் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது வரை அஜித் 62 பட இயக்குநர் மகிழ் திருமேனி தான் என்பதை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் உறுதி செய்யவில்லை. எனினும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து, அவர் தான் அஜித்தின் புதிய படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டு வந்தது.

lyca productions

இந்நிலையில் அஜித் 62 படத்தை விக்னேஷ் சிவனும் இயக்கவில்லை, மகிழ்திருமேனியும் இயகக்வில்லை என்பது தெரியவந்துள்ளது. லைகா நிறுவனம் கொரியன் படத்தின் உரிமையை வாங்கி வைத்துள்ளதாகவும், அந்த கதையில் தான் அஜித் அடுத்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த படத்தை மகிழ் திருமேனி தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு பிறகு, மீண்டும் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கதை மகிழ் திருமேனியின் சொந்தக்கதை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web