புதிய தொழிலை துவங்கினார் அஜித் குமார்..!!

 
1

அஜித் குமார் தனது பெயரில் புதியதாக மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது பல்வேறு இடங்களுக்கு தனது சூப்பர்பைக்கில் பயணம் செய்ய கிளம்பிவிடுவார் அஜித் குமார். இந்த வழக்கத்தை பல ஆண்டுகளாகவே அவர் தொடர்ந்து வருகிறார். 

மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கும் அஜித், தற்போது முதன்முறையாக சினிமாவை கடந்த புதிய துறையில் கால்பதித்துள்ளார். அதன்படி புதியதாக ஏகே மோட்டோ ரைடு என்கிற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்படியொரு ஒரு துறையில் களமிறங்க வேண்டும் என்பது நான் நீண்ட காலமாக விரும்பி  வருகிறேன். வாழ்க்கை ஒரு அழகான  பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் திறந்த பாதைகளைக் கொண்டாடுங்கள்'. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெளிப்புறங்களில் எனது ஆர்வத்தை ஒரு தொழில்முறை முயற்சியாக மாற்றும் விதத்தில் ஏகே மோட்டோ ரைடு (AK Moto Ride)  என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை கொண்டு வந்திருக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

1

இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி, அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமுள்ள ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். பாதுகாப்பு மற்றும் சௌகரியத்தில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதிலும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, உன்னிப்பாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ ரைடு வழங்கும்.

தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றிய விரிவான அறிவைக் கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார்கள். வாழு வாழ விடு என்று அந்த அறிக்கையில் அஜித் குமார் குறிப்பிட்டுள்ளார்.


 

From Around the web