அஜித் பட வில்லனுக்கு விரைவில் திருமணம்..!

 
கார்த்திகேயா

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகருக்கு திருமண நிச்சயம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.

தெலுங்கில் வெளியான ஆர்.எக்ஸ்-100 என்கிற படத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்திகேயா. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து இவருக்கு தேசியளவில் ரசிகர்கள் உருவாகினர். 

அதை தொடர்ந்து கார்த்திகேயா நடிப்பில் ஹிப்பி, கேங்க்லீடர் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. தற்போது ராஜா விக்ரமார்க்கா என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இது விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார்த்திகேயாவுக்கு ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம் குறித்த தகவலை நடிகர் கார்த்திகேயா வெளியிடவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் மூலம் பலரும் அவருக்கு வாழ்த்துக்  கூறி வருகின்றனர்.
 

From Around the web