வலிமை படத்தின் அப்டேட்- கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த அஜித்..!

 
கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த அஜித்

வலிமை பட அப்டேட் குறித்த தகவல்கள் பரபரப்பாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், நடிகர் அஜித் குமார் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு பர்ஸ்ட் லுக் கூட வெளியிடப்படவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ரசிகர்கள் பலரிடம் வலிமை பட அப்டேட் கேட்டு நச்சரித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், வெளிநாட்டினர், விளையாட்டுத்துறை பிரபலங்கள், திரைத்துறையினர் என பலரிடமும் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் கேட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை படக்குழு வலிமை அப்டேட்டை வெளியே விடுவதாக இல்லை. இன்னும் ஒரீரு தினங்களில் அது வெளியாகலாம் என்கிற செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் போது தல அஜித் கோவில் ஒன்றில் தரிசனம் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த அன்ஸீன் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

From Around the web