சர்பரைஸாக தாஜ்மஹாலுக்குள் நுழைந்த அஜித்- அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

 
தாஜ்மஹாலுக்குள் வந்த அஜித்
எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வந்ததால் அவரை பார்க்க ரசிகர்கள் முண்டி அடித்தது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா மட்டுமில்லாமல் கார் ரேஸிங், பைக் டூரிங், போட்டோகிராஃபி போன்ற பல்வேறு துறைகளிலும் நடிகர் அஜித்துக்கு ஆர்வமுண்டு. சமீபமாக துப்பாக்கிச் சுடுதலிலும் இவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடந்த 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அஜித் போட்டியாளராக பங்கேற்றார். அதில் மொத்தம் 6 பதக்கங்களை பெற்றார். அதையடுத்து தேசியளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவர் பங்கேற்றுள்ளார்.

விரைவில் டெல்லியில் தொடங்கும் போட்டியில் தமிழ்நாடு சார்பாக அவர் கலந்துகொள்கிறார். இதற்காக டெல்லி சென்றுள்ள அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பயிற்சியின் இடைவேளையில் தாஜ்மஹாலுக்கு சென்றுள்ளார் நடிகர் அஜித்.

அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அஜித்துடன் செல்போன் எடுக்க முண்டியடித்தனர். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கடந்த 2001-ம் ஆண்டு ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ‘சாம்ராட் அசோகா’என்கிற இந்தி படத்தில் அஜித் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web