பிரமாண்ட பட செட்டில் மோகன்லாலை திடீரென சந்தித்த அஜித்..!

 
அஜித் மற்றும் மோகன்லால்

மரைக்காயர்: அரபிக்கடலிண்ட சிங்கம் படத்திற்கான தயாரிப்பு பணிகளின் போது நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து பார்வையிட்ட வீடியோவை நடிகர் மோகன்லால் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ரூ. 100 கோடி செலவில் மலையாளத்தில் உருவாகியுள்ள படம் ‘மரைக்காயர்: அரப்பிக்கடலிண்ட சிங்கம்’. விரைவில் இந்த படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து படக்குழுவை சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதை மோகன்லாலும் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


எதற்காக அஜித் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார் என்பது தெரியவில்லை. எனினும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 

From Around the web